Saturday, September 30, 2006

பிழைத்துக்கொண்டார்கள் வறுமையாளர்கள்...

பிறர்க்கொன்று உதவாத செல்வர்களைவிட அச்செல்வமில்லாத வறுமையாளர்களே பிழைத்துக் கொண்டவர்கள். ஏனெனில் பொருளை வீணே தொகுத்து வைத்துப் பின் ஒருங்கே இழந்து போனார் என்று உலகவராற் பழிக்கப் படுதலினின்று அவர்கள் பிழைத்துக் கொண்டனர்.

வருந்தித் தேடிய பொருளைப் பின் காத்தலின்றுத் தப்பினர். அதனைப் புதைத்து வைத்தும் பொருட்டுக் குழி தோண்டுதலுந் தப்பினர். தம்முடைய கைகள் நோவும் படி அதனைக் கட்டிச் சேமித்தலுந் தப்பினர். இங்ஙனம் அவர்கள் தப்பித்த வகைகள் பல.

Escaped are those who are poor when compared with those who have enough money but unwilling to offer and contribute. Because in future they escape from the words of the world that they are men who fell after bunking huge amount of money.

They escape from the pain of protecting their hard earned money in future. They escape since they do not have bury their wealth. They escape from the sorrow of saving their wealth also. They are saved in many other ways also.
------
வழங்காத செல்வரின் நல்கூர்ந்தார் உய்ந்தார்;
இழந்தா ரெனப்படுதல் உய்ந்தார் - உழந்ததனைக்
காப்புய்ந்தார் கல்லுதலும் உய்ந்தார்தங் கைந்நோவ
யாப்புய்ந்தார் உய்ந்த பல. - நாலடியார்:277

0 Comments:

Post a Comment

<< Home